×

வெளிமாநிலத்தவர்கள் வருகை அதிகரிப்பு ஏற்காட்டில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை-பூலாம்பட்டியில் களைகட்டிய படகு சவாரி

ஏற்காடு : விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டில் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. நாள் முழுவதுமாக காணப்பட்ட இந்த சீதோஷ்ண நிலையை, வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.வடகிழக்கு பருவமழையால், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காலை முதலே பனிமூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

ஏற்காடு மலை முழுவதுமாக பகலில் பனி படர்ந்து காணப்பட்டது. விடுமுறை நாளான நேற்று, வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கார், வேன்களில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர். இளைஞர்கள் மற்றும் பெண்கள் டூவீலர்களில் ஏற்காட்டுக்கு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஏற்காடு படகு இல்லம் துவங்கி, பூங்காக்கள், பஸ் ஸ்டாண்ட், லேடீஸ் சீட் வரை திரும்பிய இடங்களில் எல்லாம் கார், வேன், டூலர்கள் நிறுத்தப்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.

சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்கா, லேடீஸ் ஷீட், ஜென்ஸ்சீட், சில்ரன்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், படகு இல்லாம் ஆகிய பகுதியில் குவிந்தனர். கடும் பனிப்பொழிவால் 10 அடி தூரத்தில் நிற்பவர்கள் கூட தெரியவில்லை. ஒன்டிக்கடை பகுதியில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. ஆங்காங்கே சினிமா சூட்டிங் நடைபெற்றது. ஓட்டல்கள், மீன் வருவல் கடைகள், சில்லி சிக்கன் கடைகள், பாஸ்ட்புட் கடைகள் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

இடைப்பாடி :சேலம்  மாவட்டம், இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு சேலம்,  ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வார விடுமுறை நாட்கள் மற்றும்  பண்டிகை விஷேச நாட்களில் சுற்றுலா வருவது வாழக்கமாகும். விடுமுறை நாளான  நேற்று பூலாம்பட்டிக்கு வேன், மின்சரக்கு ஆட்டோ, டூவீலர்களில் பொதுமக்கள்  குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் விசைப்படகியில் உல்லாச சவாரி  செய்து மகிழ்ந்தனர்.

நீர்மின் கதவணை பாலம், கைலாசநாதர் கோயில்,  மூலப்பாரை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயிலுக்கு சென்றனர்.  வீடுகளில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து அனைவரும் ஒன்றாக  சாப்பிட்டும், விளையாடி மகிழ்ந்தனர். அதே போல், கிழக்கு கால்வாய் பகுதியான  ஓனாம்பாறை, பில்லுக்குறிச்சி, குள்ளம்பட்டி, மூலப்பாதை ஆகிய பகுதிகளிலும்  சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பூலாம்பட்டி போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Yercaud ,Poolampatti , Namakkal: In Mohanur, the tourism officer personally inspected the establishment of a boat house and park along the banks of the Cauvery.
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து