அதிமுகவில் இருந்து பிரிந்தது அணிகள் அல்ல, பிணிகள்: ஓ.பி.எஸ். அணியை விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தது அணிகள் அல்ல, பிணிகள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்று பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின், ஓ.பன்னீர்செல்வம் அணியை விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்தது அணிகள் அல்ல, பிணிகள் என்று  கூறினார். அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகளால் கொடுக்கப்பட்ட பொறுப்புதான் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பு. ஜி - 20 மாநாடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் பழனிசாமிக்கு மட்டுமே ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது; ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

Related Stories: