வடகிழக்கு பருவமழை அக்.1 முதல் டிச.5 வரையான காலத்தில் இயல்பை விட 3% குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை : அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 377.3 மி.மீ. ஆகும். எனவே, இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இயல்பான மழையின் அளவு 277.8 மி.மீ. ஆகும். இயல்பை விட 63 சதவீதம் அதிகமாக 453.4 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இயல்பை விட 42 சதவீதம் அதிகமாக மாலை பெய்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இயல்பை விட 26 சதவீதம் கூடுதலாக மழையின் அளவு பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இயல்பை விட 28 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், வேலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Related Stories: