வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வந்த பாமக தலைவர் அன்புமணி எம்பி நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு, 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.20ஆயிரம் கோடி, நீர் மேலாண்மைக்கு மட்டும் முதல்வர் ஒதுக்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தமிழகத்தில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை உடனடியாக சட்டமாக நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை, அடுத்த கல்வியாண்டிற்குள் தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றும் என நம்புகிறோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 6 மாதத்திற்கு  முன்பு, எங்களது முடிவை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: