கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) இனி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிசம்பர் 5 ம் தேதி (நாளை) முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிசம்பர் 6 ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் காலை 09.05 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும்.அதே போல் (ரயில் எண் 06115/06116) தாம்பரம் -திருவண்ணாமலை -தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Stories: