×

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் அகல்விளக்கு விற்பனை அமோகம்

உடுமலை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு உடுமலையில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருநாள் நாளை மறுநாள்  6ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உடுமலை மத்திய  பேருந்து நிலையம், உழவர் சந்தை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மண் அகல்  விளக்குகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு  ஒரு அகல் விளக்கு 1 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்கப்படுகிறது. விருத்தாச்சலத்திலிருந்து  திருப்பூர் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த அகல்விளக்குகளை  பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். விளக்குகள் செய்ய தேவையான  களிமண் கிடைப்பதில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலை ஏற்றத்துடன்  விற்பனை செய்யப்படுவதாக வியாபாரி தெரிவித்தார்.



Tags : Karthikai Deepat festival ,Agalvilkam ,Udumalai , On the occasion of Karthikai Deepat festival, the sale of Agalvilkam in Udumalai is huge
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...