×

காஸ்ட்லியான நகரங்களில் நியூயார்க், சிங்கப்பூர் டாப்

நியூயார்க்: உலகளாவிய அளவில் வாழ்வதற்கு அதிக செலவு உள்ள நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார இன்டலிஜென்ஸ் அமைப்பு ஆய்வு நடத்தியது. இதில் உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளன. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில் ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றன. உக்ரைன்-ரஷ்யா இடையில் நடக்கும் போர் காரணமாக வாழ்க்கை நடத்துவதற்கான செலவு 8.1 சதவீதம் அதிகரித்து உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளன. மேலும் பெட்ரோல், டீசல், உணவுப்பொருட்கள் விலை ஆகியவை இந்த காலகட்டத்தில் அதிகரித்து உள்ளன. இதனால் அனைத்து முக்கிய நகரங்களிலும் வாழ்க்கைச்செலவு அதிகரித்து உள்ளது. உலகில் உள்ள 172 நகரங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பொருட்கள் விலைகளை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வாடகை மற்றும்  பொதுப் போக்குவரத்து விலையும் அதிகரித்து உள்ளது.

செலவு அதிகம் உள்ள நகரங்கள்
1. நியூயார்க், சிங்கப்பூர்
3. டெல்அவிவ்(இஸ்ரேல்)
4. ஹாங்ஹாங், லாஸ் ஏஞ்சல்ஸ்
6. சூரிச்(சுவிஸ்)
7. ஜெனீவா(சுவிஸ்)
8.சான்பிரான்ஸ்சிஸ்கோ(கலிபோர்னியா)
9. பாரிஸ்(பிரான்ஸ்)
10. கோபன்ஹேகன்(டென்மார்க்).

Tags : New York, Singapore , New York, Singapore top the costliest cities
× RELATED ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகர...