×

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 32 பவுன் நகை: மீட்டு ஒப்படைத்த பெண் போலீஸ்

விழுப்புரம்: சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன் தினம் இரவு விழுப்புரத்துக்கு வந்தது. அப்போது  ரயிலின் முன்பதிவு பெட்டியான எஸ்-9 கோச்சில் ஒரு டிராவல்ஸ் பை கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அந்த சமயத்தில் விழுப்புரத்தில் இருந்த ரயில்வே பெண் போலீஸ் சுதா என்பவர், கேட்பாரற்ற நிலையில் பையை பார்த்து இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டார். அதற்கு அவர், சென்னையில் இருந்து ரயில் புறப்படும்போதே இந்த பை இதே இருக்கையில் இருப்பதாகவும், யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றார். இதையடுத்து அந்த இருக்கையை முன்பதிவு செய்தவரின் விவரம் குறித்து உரிய விசாரணை நடத்தி அந்த பை, சென்னை மாத்தூரை சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சுசித்ராவுக்கு (30) சொந்தமானது என்பதும், அந்த பையினுள் 32 பவுன் நகை இருந்ததும் தெரியவந்தது. உரிய விசாரணைக்கு பின்பு சுசித்ராவிடம் பையை ஒப்படைத்தனர். பெண் போலீஸ் சுதாவின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

Tags : 32-pound jewelery left unattended on train: woman police recovers and hands over
× RELATED தென் மேற்கு பருவ மழை தீவிரம்.....