மேல ஆசாரிபள்ளத்தில் மேயர் ஆய்வு

நாகர்கோவில்: நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் பகுதியில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று காலை  ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதியில் சாலைகள், வடிகால்களில் மேற்கொள்ள  வேண்டிய சீரமைப்பு பணிகள் தொடர்பாகவும் அவர் கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதி மாணவர்கள் மின் விளக்கு அமைத்து தர கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.  

இந்த ஆய்வின் போது துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர்,  மாநகர திமுக தலைவர் ஆனந்த், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல்,  வேல்முருகன், எம்.ஜே.ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: