மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பலி: போலீசார் தடயங்களை சேகரித்து காரணம் குறித்து விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீடு மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிழக்கு மெதினிப்பூர் உள்ள பூபதி நகரில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது. நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் பூத் கமிட்டி தலைவர் ராஜ்குமார் மன்னாவுக்கு சொந்தமான கூரைவீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த பயங்கரவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செயலாளர் அபிஷேக் பேனர்ஜி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: