துபாய் விமானத்தில் தங்கம், அமெரிக்க டாலர் பறிமுதல்; 2 பேர் கைது

சென்னை:  துபாய் விமானத்தில் இருந்து தங்கம், அமெரிக்க டாலர், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 41 வயது ஆண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தினர். அவரது உடமைகளுக்குள் 450 கிராம் தங்க பசை மற்றும் 35 பார்சல்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 21.5 லட்சம்.

இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 25 வயது வாலிபர் ஆடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மறைத்து வைதக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பு ரூ.8.5 லட்சம். சுங்க அதிகாரிகள் தங்கம், டாலர் சிகரெட்டை பறிமுதல் செய்து இருவரையும் கைதுசெய்தனர்.

Related Stories: