ராகுலுக்கு கர்நாடக ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் கடந்த  அக்டோர் 3ம் தேதி தொடங்கி 20 நாட்கள் யாத்திரை நடத்தினார். அப்போது கேஜிஎப்-2 திரைப்படத்தில் வரும் பாடலை பயன்படுத்தியது தொடர்கான எம்ஆர்டி மியூசிக்கல் நிறுவனம் மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அம்மனு நேற்று தலைமை நீதிபதி பி.பி.வர்லே மற்றும் நீதிபதி அசோக் எஸ்.கிணகி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இப்புகாரில் விளக்கம் கேட்டு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, காங்கிரஸ் சமூகவலைத்தள பிரிவு நிர்வாகி சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: