×

தி.மலை தீபத்திருவிழாவை முன்னிட்டு டிச.5 முதல் 8 வரை 24 சிறப்பு ரயில்கள் உள்பட 63 ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்..!

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் 05.12.2022 முதல் 08.12.2022 வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

05.12.2022 முதல் 08.12.2022 ஆகிய 4 தினங்களில் சென்னை கடற்கரை (புறப்படும் நேரம் 18.00 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் - 00.05) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் - 03.45) முதல் சென்னை கடற்கரை (சென்றடையும் நேரம் - 09.05) வரை வேலூர், கணியம்பாடி கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

05.12.2022 முதல் 08.12.202 ஆகிய 4 தினங்களில் புதுச்சேரி (புறப்படும் நேரம் 19.45 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் - 22.30) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் - 03.30) முதல் புதுச்சேரி (சென்றடையும் நேரம் - 06.20) வரை விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

06.12.2022 மற்றும் 07.12.2022 ஆகிய 2 தினங்களில் மயிலாடுதுறை (புறப்படும் நேரம் 06.00 மணி) முதல் திருவண்ணாமலை (சென்றடையும் நேரம் - 10.55) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் 1240) முதல் மயிலாடுதுறை (சென்றடையும் நேரம் - 17.40) வரை விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

06.12.2022 மற்றும் 07.12.2022 ஆகிய 2 தினங்களில் திருச்சிராப்பள்ளி (புறப்படும் நேரம் 15.45 மணி) முதல் வேலூர் (சென்றடையும் நேரம் - 00.40) வரை மற்றும் வேலூர் (புறப்படும் நேரம் - 01.30) முதல் திருச்சிராப்பள்ளி (சென்றடையும் நேரம் - 10.45) வரை திருப்பாத்திரிபுலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

06.12.2022 மற்றும் 07.12.2022 ஆகிய 2 தினங்களில் தாம்பரம் (புறப்படும் நேரம் 08.40 மணி) முதல் திருவண்ணாமலை சென்றடையும் நேரம் - 12.15) வரை மற்றும் திருவண்ணாமலை (புறப்படும் நேரம் - 13.45) முதல் தாம்பரம் (சென்றடையும் நேரம் - 17.30) வரை செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

தீபத்திருவிழாவினை முன்னிட்டு 05.12.2022 முதல் 08.12.2022 வரை 4 நாட்களில் இயக்கப்பட உள்ள 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்களின் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இந்த ரயில் சேவைகளை உபயோகப்படுத்தி பயன் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக் கொண்டார்.


Tags : Malai Deepatri Festival , 63 trains, including 24 special trains, will run from 5th to 8th December on the occasion of the Malai Deepatri Festival: Southern Railway Information..!
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...