×

ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை: ஐ.நாவில் இந்தியா பதிலடி..!

லண்டன்: ஜனநாயகம் குறித்து இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை என ஐ.நாவில் இந்தியா  தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பு நேற்று இந்தியா வசம் வந்தது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ருச்சிரா காம்போஜிடம் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பதிலளித்த இந்தயாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ்; உலகிலேயே இந்தியா தான் முதலில் நாகரீமடைந்த நாடு. இந்தியா பழம்பெருமை வாய்ந்த தேசம். இந்திய ஜனநாயகத்தின் வேர்கள் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.

நாங்கள் எப்போதுமே ஜனநாயகமாகத் தான் இருந்துள்ளோம். அண்மைக் காலத்தை எடுத்துக் கொண்டாலும் ஜனநாயகத்தின் 4 தூண்களும் வலுவாக இருக்கின்றன. இந்தியாவில் சமூக ஊடகங்கள் கூட சுதந்திரமாக தான் இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலும் முறையாக நடந்து வருகிறது. எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கின்றது. எனவே ஜனநாயகம் குறித்து எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியம் ஏற்படவில்லை என கூறினார்.


Tags : India ,UN , No one needs to teach India about democracy: India retaliates in UN..!
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது