×

ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி

சென்னை: ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசாணை எண்.56, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்.18.04.2022-ல் ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க முதல் கட்டமாக நகர் ஊரமைப்புத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு Golive அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 24.06.2022 முதல் மனைப்பிரிவு வரைபடத்திற்கான விண்ணப்பங்களுக்கும் மற்றும் 01.09.2022 முதல் கட்டிடம் மற்றும் நிலஉபயோக மாற்றத்திற்கான விண்ணப்பங்களுக்கும் ஒற்றை சாளர இணையதளம் மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இது தொடர்பாக, விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு தொலைபேசி உதவி எண்.044 29585247 மற்றும் மின் அஞ்சல் முகவரி support_swp.dtcp@tn.gov.n ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இச்சேவையினை அலுவலக நேரங்களில் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Department of Housing and Urban Development , Housing and Urban Development Department permits approval of building and plot plans through single window internet
× RELATED வீட்டுவசதி துறையில் நிலுவையில் உள்ள...