தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகி நீக்கம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட நிர்வாகி V.P.R.செல்வகுமார் நீக்கக்கப்படுவதாக  விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் V.P.R.செல்வகுமார் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், கழக பதவி மற்றும் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (02.12.2022) முதல் நீக்கப்படுகிறார். இவருடன் கழக நிர்வாகிகள், மற்றும் கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: