×

சீனாவில் கொரோனா தனிமை முகாமிற்கு தீ வைப்பு

ஷாங்காய்: உலகையே உலுக்கிய கொரோனா, சீனாவிலிருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது என்றாலும், அந்நாட்டில் பரவல் குறைவாகவே இருந்தது. தற்போது உலகமே கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ளது. அதனால் அந்நாட்டின் ‘பூஜ்ஜிய-கோவிட்’ கொள்கையின் அடிப்படையில், சீன அரசின் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியது. ஆனால் சீன அரசின் கடுமையான கட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து தீ வைப்பு உள்ளிட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 1989ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை பலி வாங்கிய ஜனநாயக ஆதரவுப் போராட்டத்துக்குப் பிறகு, சீனாவில் நடைபெறும் மிகப் பெரிய போராட்டம் இதுவாகும். இந்நிலையில் சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட 5வது நகரான குவாங்ஷோவில் அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் திடீரென அறிவித்தனர். முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசின் ‘பூஜ்ஜிய-கோவிட்’ கொள்கைகள் மீதான நாடு தழுவிய போராட்டம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக, தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவ்விசயத்தில் மக்களின் தொடர் போராட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பின்வாங்கியுள்ளதாகவும், முன் எப்போதும் இல்லாத அளிவில் தனது கொள்கையில் அவர் ‘யு-டர்ன்’ அடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விஷயத்தில் அதிபர் ஜி ஜின்பிங், தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதற்காக மக்களின் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


Tags : Corona isolation ,China , Corona isolation camp set on fire in China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...