×

மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி அம்மன் கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை : தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி அம்மன் கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி திருக்கோயில், அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக, திருச்செந்தூர் திருவண்ணாமலை மேல்மலையனூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர் அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மையங்கள் மற்றும் பழனி திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை முதலமைச்சர் கடந்த 31.12.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இராமேசுவரம் - அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம் சமயபுரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2022-23ஆம் அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், வருகை புரியும் 10 திருக்கோயில்களில் ஆண்டிற்கான இந்து சமய பக்தர்கள் அதிகளவில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த திருக்கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் இரா.கண்ணன், ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கொண்டனர்.

மேலும் மதுரை, விருதுநகர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, திரு. எம். பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Madurai Meenatshi Amman Temple ,Behagar Temple ,Ithankudi Mariamman Temple ,Bannari Amman Temple , The Chief Minister inaugurated medical centers at Madurai Meenakshi Amman Temple, Alaghar Temple, Sitankudi Mariamman Temple and Pannari Amman Temples.
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...