×

பிரேசிலின் தெற்கு மாகாணங்களை புரட்டிப்போட்ட மழை: வெள்ளத்தில் தத்தளித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

பிரேசில்: பிரேசிலில் கொட்டி தீர்த்த கனமழையால் சான்டா கேடரினா, செர்கைப் ஆகிய  மாகாணங்களில் வெள்ளம் முழ்கடித்துள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் மீட்பு பணிகள் ஹெலிகாப்டர்கள் மூலமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளம் சுழ்ந்திருக்கும் இந்த பகுதி பிரேசில் நகரி சாண்டா கேடரினா மாகாணம் ஆகும்.

பிரேசிலில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சான்டா கேடரினா, செர்கைப் ஆகிய மாகாணங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெடுஞ்சாலைகளை வெள்ளம் முழ்கடித்திருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாண்டா கேடரினா மாகாணத்தில் மட்டும் 17 நகரங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதாக மாகாண நிர்வாகம் கூறியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் சுமார் 10 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கி நிற்பதால் மக்கள் வீட்டின் கூரைகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கேடரினா, செர்கைப் மாகணங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

வான்வெளியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிரேசில் பேரிடர் மேலாண்மை படையினர் இதுவரை 1200 பேரை மீட்டு பாதுகாப்பு இடங்களில் தங்க வைத்துள்ளனர். கனமழை எதிரொலியாக பரானா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரேசிலில் கனம்ழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வெளியாகி இருக்கும் அறிவிப்பு மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியிருக்கிறது.

Tags : Brazil , Rains lash Brazil's southern provinces: Flood victims rescued by helicopter
× RELATED பிரேசிலில் கோர விபத்து: விமானம்...