×

குவாரி, குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: குவாரி மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குவாரி நிறுவனங்களிடம் இருந்து ரூ.85.45 கோடியும், குட்கா நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.45 கோடியும் லஞ்சமாக விஜயபாஸ்கர் பெற்றுள்ளார். வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. 2017 ஏப்ரலில் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags : Maji Minister ,C. Vijayabascar , Quarry, gutka company, C Vijayabaskar, Rs 87.90 crore bribe, Income Tax Department
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்