விழிஞ்ஞம் கலவரம் திட்டமிட்ட சதி; கேரள முதல்வர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் கலவரம் சிலரின் திட்டமிட்ட சதி என்றும், போலீசார் அமைதி காத்ததால் தான் கடும் விளைவுகள் தவிர்க்கப்பட்டது என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் திருச்சூரில் பயிற்சி முடிந்த மகளிர் போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பினராய் விஜயன் பேசியதாவது: மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் விழிஞ்ஞத்தில் கலவரம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் போலீசார் அமைதி காத்ததால்தான் வன்முறையாளர்களின் திட்டம் நடக்காமல் போனது. விழிஞ்ஞத்தில் நடந்த கலவரம் ஒரு திட்டமிட்ட சதியாகும். போலீஸ் நிலையத்தையும், போலீசாரையும் தாக்குவோம் என்று ஏற்கனவே போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். இதன் பிறகு தான் இந்த கலவரம் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: