தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

சென்னை: தயாரிப்பாளர் கே.முரளிதரன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65. லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் பல்வேறு படங்களை தயாரித்தவர் முரளிதரன். இவர், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், விஜயகாந்த் நடித்த வீரம் வௌஞ்ச மண்ணு, விஜய் நடித்த பிரியமுடன், பகவதி, அஜித் நடித்த உன்னைத் தேடி, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சூர்யா நடித்த உன்னை நினைத்து உள்பட ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். நேற்று கும்பகோணத்திலுள்ள கோயிலுக்கு தனது மனைவியுடன் முரளிதரன் சென்றிருந்தார்.

அப்போது கோயில் படிக்கட்டில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் பரிசோதித்த டாக்டர், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினார். முரளிதரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Stories: