கே.முரளிதரன் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் இரங்கல்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கே.முரளிதரன் மறைவுக்கு செய்தித்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய எல்.எம்.எம். என்று அழைக்கப்படும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரும், பல வெற்றி தமிழ் திரைப்படங்களை தயாரித்தவருமான கே.முரளிதரன் நேற்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: