வீடியோ எடுத்துக் கொண்டிருந்த தென்கொரிய பெண்ணுக்கு முத்தம்: மும்பையில் 2 வாலிபர்கள் கைது

மும்பை: மும்பையில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் யூடியூபரை துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். தென் கொரியா நாட்டைச் சேர்ந்த சேர்ந்த பெண் யூடியூபர், மும்பையில் ஆன்லைனில் லைவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் யூடியூபரை இரண்டு வாலிபர்கள் கையைப் பிடித்து இழுத்து, அவரது உதட்டில்  முத்தம் கொடுக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ெவளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக மும்பை போலீசார், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் தென்கொரியா பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முன்பையைச் சேர்ந்த மொபீன் சந்த் முகமது ஷேக் மற்றும் முகமது நகீப் சத்ரேலாம் அன்சாரி என்பது அடையாளம் தெரிந்தது. அதையடுத்து மேற்கண்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: