×

மழையால் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிப்பு குற்றாலம் மெயினருவி, களக்காட்டில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையில் ெபய்த மழையால் குற்றாலம் மெயினருவி, களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்த போதும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் போதியளவு மழை பெய்யவில்லை.  

இருப்பினும், குற்றாலம், களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை  பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் வனப்பகுதியில் மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில்  தண்ணீர் வரத்து  அதிகரித்தது. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் அருவிகளில்  தண்ணீர் வரத்து  அதிகரித்ததோடு மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது  தண்ணீர்  ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி  மெயின் அருவியில் குளிக்க தடை  விதிக்கப்பட்டது.

சுற்றுலா  பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மெயின் அருவியில் குளிக்க முடியாமல்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதேவேளையில் பழைய குற்றாலம் அருவி,  ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் தடை  விதிக்கப்படவில்லை.  

இதேபோல் களக்காடு தலையணையிலும் நேற்று காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இத்தகவலை தெரிவித்த வனச்சரகர் பிரபாகரன் மேலும் கூறுகையில் இருப்பினும் தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றார்.

Tags : Kurdalam Mainaruvi ,Kalakkad , Rain, increase in water flow, waterlogging of the court, ban on bathing for tourists
× RELATED களக்காட்டில் வாலிபரின் வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு