×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கிழக்கு திசை காற்றின் காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் வரும் 5-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிச.8ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை நெருக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடற்கரையை நெருங்கும் போது கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Meteorological Centre ,Tamil Nadu , Chance of moderate rain in Tamil Nadu from today for 5 days: Chennai Meteorological Department Information
× RELATED தமிழ்நாட்டில் 5 நாளுக்கு வெப்பம் அதிகரிக்கும்