×

மயிலாடும்பாறையில் புதிய வனச்சரக கட்டிடம் வருமா?.. மாவட்ட வன அதிகாரிகள் கவனிக்க கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர்.

அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு அலுவலக கட்டிடங்களை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய அரசு அலுவலக கட்டிட பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்ததாகவும், தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மயிலாடும்பாறை கிராமத்தில் வருசநாடு வனசரகத்துக்குட்பட்ட வனத்துறை அதிகாரிகள் தங்குவதற்கு கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் அங்கு ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களும் அப்பகுதியில் பயத்
துடன் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த வனத்துறை கட்டிடத்தை இடிக்க வேண்டும் என மாவட்ட வன அதிகாரிகளிடம் வனத்துறையினர் புகார் தெரிவித்தனர்.

Tags : Mayilatumparai ,Forest , Mayiladumbarai, New Forest Building, District Forest Officers,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...