ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை நிறைவேற்றப்பட்ட நிரந்தர சட்ட மசோதா தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சட்டத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து பேசிவருகின்றனர்.  

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழக அரசு அவரச சட்டம் இயற்றி கடந்த அக்.1ம் தேதி ஆளுநரின் ஆளுநரின் அலுவலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் அன்று அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர தடை சட்டம் கொண்டு வர முடிவு செய்து தமிழக ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்டமசோதா இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்.28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்தித்தார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தி உள்ளார். 

Related Stories: