×

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!!

அகமதாபாத்: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலின்
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாஜக, ஆம்-ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

182 இடங்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று மற்றும் வரும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தெற்கு குஜராத், கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் உள்ள தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 19 மாவட்டங்களில் 89 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

பாஜக, காங்கிரஸ் 89 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி போட்டியிடும் கம்பாலியா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா போட்டியிடும் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  

89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். மேலும் 14,382 வாக்குசாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Tags : Gujarat Assembly Elections , Voting for the first phase of the Gujarat assembly elections which has created great anticipation across the country has begun!!
× RELATED குஜராத் பேரவை தேர்தலில் அண்ணியை...