புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 56 கனஅடியில் இருந்து 187 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 72 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 527 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 497 மில்லியன் கனஅடியாக சரிந்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 10 கனஅடியில் இருந்து 3 கனஅடியாக சரிந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 580 கன அடியாக உள்ளது. பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: