×

மணலி மண்டலத்தில் ரூ.134.61 கோடியில் சிறுவர் பூங்காக்கள்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மணலி மண்டலத்தில் தங்கள் வார்டுகளில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் ராஜேந்திரன், காசிநாதன், தீர்த்தி ஆகியோர் மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலத்துக்குட்பட்ட 16வது வார்டு தணிகை நகரில் ரூ.86.91 லட்சம், 19வது வார்டு புவனேஸ்வரி நகர் மற்றும் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 3 இடங்களில் ரூ.41.81 லட்சம் செலவிலும், 22வது வார்டு தேவராஜன் தெருவில் ரூ.4.89 லட்சம் என 6 இடங்களில் ரூ.134.61 கோடி செலவில் சிறுவர் பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த, பணிகள் விரைவில் துவங்கும் என்று மணலி மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Children's Parks ,Manali Mandal , Manali Mandal, Rs.134.61 crore, Children's Park
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்