×

ரயிலில் வாலிபர் எடுத்து வந்த ரூ.52 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்?

தண்டையார்பேட்டை: கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர  விரைவு ரயில் நேற்று காலை வந்தது. பெரம்பூர் ரயில் நிலையம் முதலாவது நடைமேடைக்கு ரயில் வந்து நின்றபோது, எஸ்3 பெட்டியில் இருந்து  ஒரு வாலிபர் பையுடன் இறங்கினார். அப்போது அங்கு இருந்த ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் வாலிபரை பிடித்து அவரது பையை சோதனையிட்டனர். அதில், இரண்டு கட்டு பணம் இருந்தது. அந்த வாலிபரை ரயில்வே போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாராயணபேட்டை வாசிம் அக்ரம் (26) என்பது தெரியவந்தது அவர பையில் 2000 ரூபாய் நோட்டுகள் 300ம், 500 ரூபாய் நோட்டுகள் 9200 என மொத்தம் 52 லட்சம் ரூபாய் இருந்தது.

அந்த பணத்திற்கான  உரிய ஆவணம் இல்லாததால் ஹவாலா பணமாக  இருக்க கூடும் என்று ரயில்வே போலீசார் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பணத்தை பறிமுதல் செய்து அந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பணத்தை யாருக்கு கொடுக்க எடுத்து வந்தார்  என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Rail, teenager, Rs.52 lakh, hawala money, confiscated
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...