×

சட்டப்பேரவையில் நடிகர் விவேக், கி.ரா, 13 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 13 முன்னாள் எம்எல்ஏக்கள், நடிகர் விவேக், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.57 மணிக்கு அவைக்கு வந்தார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 9.56 மணிக்கு அவைக்கு வந்தனர். சரியாக காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது.  கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்எல்ஏக்கள் பாண்டுரங்கன்(கலசப்பாக்கம்), முகமது ஜான்(ராணிப்பேட்டை), பாப்பா சுந்தரம்(குளித்தலை), செ.அரங்கநாயகம்(கோவை மேற்கு, தொண்டாமுத்தூர்), செ.விஜயன்(திருவொற்றியூர்), வி.எஸ்.ராஜி(செய்யூர்), கி.ரா.ராஜேந்திரன்(பர்கூர்), சகாதேவன்(செஞ்சி), செல்வி எல்.சுலோசனா(மேட்டுப்பாளையம்), கே.பி.ராஜு(பேரூர்), கி.ராமச்சந்திரன்(மன்னார்குடி), எம்.அன்பழகன்(பழனி), ஜெ.பன்னீர்செல்வம்(திருநாவலூர்) ஆகிய 13 பேருக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பிரபல நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் விவேக், பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் கி.துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் மற்றும் முதல் மூன்று சட்டப்பேரவைகளின் உறுப்பினர் டி.எம்.காளியண்ணன்,  அண்ணா பல்கலைக்கழ முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்….

The post சட்டப்பேரவையில் நடிகர் விவேக், கி.ரா, 13 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Vivek ,Kira ,Chennai ,Tamil Nadu ,Legislative Assembly ,K. Rajanarayanan ,Tulsi Ayya Vandaiyar ,DM Kaliyannan ,K. Ra ,
× RELATED சந்தானத்துடன் காமெடி செய்தது சவாலானது: பிரியாலயா