இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்: அமெரிக்காவுக்கு சீனா மிரட்டல்

வாஷிங்டன்: இந்திய உடனான உறவில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவை சீனா மிரட்டியுள்ளது. கடந்த கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  இதுதொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில்,  சீனா, இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழைகிறது என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது.

இரு நாடுகளும்  2020ம் ஆண்டு முதலே எல்லையில் படைகளை குவித்து கட்டுமானங்களை எழுப்புகின்றனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதல்  46 ஆண்டுகளில் நடந்த பயங்கரமான மோதல். இந்தியா-அமெரிக்கா  நெருக்கமான நட்புறவு கொண்டிருப்பதை சீனா விரும்பவில்லை.  இதை தடுக்கவே,எல்லையில் அடிக்கடி இந்தியாவுடன் பிரச்னைகளை  சீனா உண்டாக்குகிறது. இந்தியாவுடனான உறவில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகளை சீனா மிரட்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மீது பாய்ச்சல்

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், ``இந்தியா-அமெரிக்கா இணைந்து சீனா-இந்தியா எல்லையில் நடத்தும் கூட்டு ராணுவ போர் பயிற்சி சீனா-இந்தியா இடையே 1993 மற்றும் 1996ம் ஆண்டுகளில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மீறுவதாகும். இது இருநாடுகள் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை சீர்குலைக்கும்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: