×

நான் இயக்குனராக மணிரத்னம் தான் காரணம்: ரிஷிகா சர்மா பேட்டி

சென்னை: தொழில் அதிபர் விஜய் சங்கேஸ்வர் வாழ்க்கையை விவரிக்கும் ‘விஜயானந்த்’ என்ற பான் இந்தியா படம், வரும் 9ம் தேதி திரைக்கு வருகிறது. ‘ட்ரங்க்’ என்ற படத்தை தொடர்ந்து ரிஷிகா சர்மா இயக்கியுள்ளார். நிஹால், ஸ்ரீ லதா பிரகலாத், பரத் போபண்ணா, அனந்த் நாக், விநயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி நடித்துள்ளனர். கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். மதுரகவி பாடல்கள், வசனம் எழுதியுள்ளார். வி.ஆர்.எல் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ரிஷிகா சர்மா பேசியதாவது: கன்னடத்தில் தயாரான முதல் சுயசரிதை படம் இது.

நான் மணிரத்னத்தின் தீவிர ரசிகை. அவர் இயக்கியுள்ள ‘குரு’ படத்தை ரசித்த பிறகுதான் சுயசரிதை படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. மணிரத்னம், புட்டண்ணா கனகல் ஆகியோரிடம் நிறைய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன். 4 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான உணர்வுகளை விவரிக்கும் படமாக ‘விஜயானந்த்’ உருவாகியுள்ளது. பிள்ளைகளின் எதிர்கால கனவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை சொல்லி, இளைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். ‘விஜயானந்த் ரோட் லைன்ஸ்’ என்ற பெயரிலுள்ள ‘விஜயானந்த்’தை தலைப்பாக்கி இருக்கிறேன். விஜய் என்றால் வெற்றி, ஆனந்தம் என்றால் சந்தோஷம். நமது ரசிகர்களுக்கு அதிக உத்வேகத்தையும், உற்சாகத்தையும் இப்படம் வழங்கும் என்று நம்புகிறேன்.


Tags : Mani Ratnam ,Rishika Sharma , I am the director, Mani Ratnam, the reason, Rishika Sharma, interview
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்