நத்மதாபுரம்: நடிகை ரவீணா டாண்டன் (50) இந்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். டி.வி நிகழ்ச்சிகள், வெப்தொடர்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார். பாலிவுட் படத்தையும் தயாரித்துள்ளார். தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமல்ஹாசனுடன் ‘ஆளவந்தான்’, கன்னடத்தில் யஷ் உடன் நடித்த ‘கேஜிஎஃப் 2’ படத்தின் தமிழ் டப்பிங்கிலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த ரவீணா டாண்டன், தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பகத்தில் இருக்கும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ரவீணா டாண்டன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். சஃபாரி வாகனத்தில் சென்றபோது, திடீரென்று புலி ஒன்று அவருக்கு அருகில் ஓடி வருவது போன்றும், பிறகு அந்த புலி அவரை நோக்கி உறுமுவது போன்றும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் ரவீணா டாண்டன் மற்றும் அவரது குழுவினர் எப்படி சென்றனர்? இதுபோன்ற நபர்களால் வன உயிரனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து சத்புரா புலிகள் காப்பகத்துடைய துணை இயக்குனர் சந்தீப் பெலோஜ் கூறுகையில், ‘நடிகை ரவீணா டாண்டன் வனப்பகுதிகளுக்கு சென்று வந்தது குறித்தும், அவருடன் சென்ற ஓட்டுநர் மற்றும் வழிகாட்டி யிடமும் விசாரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட அன்றைய தினம் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு நோட் டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்றார். இந்த விவகாரத்தை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த புலி வீடியோவை ரவீணா டாண்டன் நீக்கிவிட்டார்.