×

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமரின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகையின்போது, எந்த வித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் இணைய குற்றங்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் துணைவேந்தர் கவுரி தலைமையில் நடந்தது. இந்த கருத்தரங்கில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார்.

பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்தார். அப்போது அவரது வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை. பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக எந்த ஒரு அமைப்பும் தமிழக காவல்துறையிடம் இதுவரை புகார் தெரிவிக்கவில்லை. தமிழக காவல்துறையினரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகள் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. பல ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் தமிழக காவல்துறையில் பின்பற்றப்படுகிறது.

தமிழக காவல்துறையிடம் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் உள்ளது. காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு உபகரணங்களுடன் அதிகாரிகள் சென்றுள்ளனர். மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவிற்கு தரமான உபகரணங்கள் நமது காவல்துறையில் உள்ளது. நம்மிடம் 2 மடங்குக்கு அதிகமான தரமான உபகரணங்கள் இருக்கிறது.தமிழக வழக்குகளில் 15 என்ஐஏவிடம் உள்ளது.

அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ளவர்களின் செல்போன்கள், ஆதாரங்களை பயன்படுத்தி கூட வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுவார்கள். எனவே இளைஞர்கள், வேலை இல்லாத பட்டதாரிகள் எல்லோரும் தங்களுடையே செல்போன்கள், அடையாள அட்டைகள், வங்கி கணக்குகள் பயன்படுத்தி சைபர் குற்றங்கள் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குற்றங்கள் செய்யும் வெளிநாட்டில் உள்ளவர்களை எளிதில் பிடிக்க முடியாது. ஆனால், உங்களை எளிதாக பிடித்துவிடுவார்கள்.  மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவிற்கு தரமான உபகரணங்கள் நமது காவல்துறையில் உள்ளது.

Tags : Chess ,Olympiad ,DGP ,Shailendrababu , No lapse in PM's security at Chess Olympiad opening ceremony: DGP Shailendrababu informs
× RELATED பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய...