அதிமுகவை நம்புனா கரை சேர்ப்போம் நம்பலைனா நட்டாத்துல விட்டுருவோம்: பாஜவுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

மதுரை: அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம் என பாஜவை தாக்கி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக, மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை வகித்தார்.

கூட்டத்தில் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘அதிமுக முடங்கியுள்ளது என பாஜவினர் கூறி வருகின்றனர்.

பார்ப்பவர்களின் கண்ணோட்டம்தான் அப்படி உள்ளது. எங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக அண்ணன், தம்பி போல இருக்கிறோம். நாங்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டோம். அதிமுக மீது துரும்பை கொண்டு எறிந்தால், நாங்கள் தூணைக் கொண்டு எறிவோம். அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் நட்டாற்றில் விட்டு விடுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்டு முன்னாள் முதல்வரான கலைஞரை நாங்கள் வணங்குவோம். அதில் தவறில்லை’’ என்றார்.

Related Stories: