×

என்டிடிவி இயக்குனர்கள் பதவி விலகல்

புதுடெல்லி: பிரபல தனியார் செய்தி  நிறுவனமான ‘என்டிடிவி’-யின் நிறுவனர் மற்றும் இயக்குனர்களாக பிரணாய் ராய்  மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் உள்ளனர். இந்த நிறுவனத்தின் 55.18 சதவீதம் பங்குகளை பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் குழுமம் கைப்பற்றியது. இந்நிலையில் என்டிடிவி வாரிய கூட்டத்தின் முடிவில், பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராயின் ஆகியோர் தங்களது இயக்குனர் பதவியில் இருந்து விலகினர். இதேபோல் என்டிடிவியின் பிரபல செய்தி தொகுப்பாளர் ரவீஷ்குமாரும் நேற்று பணியில் இருந்து விலகினார். அதையடுத்து சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புகாலியா மற்றும்  செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் புதிய இயக்குனர்களாவதற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tags : NDTV , NDTV directors resign
× RELATED என்டிடிவி பங்குகளை வாங்குவது வெட்ககேடு: அதானி மீது காங். ஆவேசம்