சுகேஷின் கூட்டாளி கைது

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகரின் பெண் கூட்டாளி பிங்கி இரானியை டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் நேற்று கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், டெல்லி திகார் சிறையில் இருந்தபடி தொழிலதிபர்களை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்ததாகவும், அந்த பணத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை தந்ததாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கிறது. இதுதொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் சுகேஷுக்கு நடிகைகளை அறிமுகம் செய்து வைத்ததாக மும்பையைச் சேர்ந்த பிங்கி இரானியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று விசாரணைக்காக அவர் நேரில் ஆஜரான நிலையில், அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதால் பிங்கி இரானியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: