×

ஆந்திரா முதல்வரின் தங்கை பாதயாத்திரைக்கு தடை

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என தனி கட்சி தொடங்கி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தங்கை ஷர்மிளா. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு நரசம்பேட்டையில் பாத யாத்திரையின்போது ஆளும் டிஆர்எஸ் கட்சியினருக்கும்  ஷர்மிளா கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது ஷர்மிளாவின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதோடு அவரின் கேரவேனுக்கு தீ வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை டி.ஆர்.எஸ். கட்சியினர் தாக்கியதில் உடைக்கப்பட்ட தனது காரில் அவரே காரை ஓட்டி கொண்டு முதல்வர் சந்திரசேகர் ராவ் இல்லத்தை முற்றுகையிட சென்றார். காரை போலீசார் இழுத்து சென்றதோடு சர்மிளாவை கைது செய்தனர்.  பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஷர்மிளா மேற்கொண்டு வந்த பாதயாத்திரைக்கு தற்காலிமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Andhra CM , Andhra CM's sister's padayatra banned
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்