×

மோடி 100 தலை ராவணன் விவகாரம்; தேர்தல் முடிவு காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: குஜராத் மாஜி முதல்வர் பேட்டி

ராஜ்கோட்: குஜராத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், ‘பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது தன்னைப் பற்றி  மட்டுமே பேசுகிறார். வேறு யாரையும் பார்க்க வேண்டாம்; இந்த மோடியைப் பார்த்து  வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்கிறார். உங்கள் முகத்தை நாங்கள் இன்னும் எத்தனை முறை பார்க்க வேண்டும்?  உங்களுக்கு எத்தனை உருவங்கள் உள்ளன? ராவணனைப் போல உங்களுக்கு 100 தலைகள்  உள்ளதா?’ என்று பேசினார். இவரது பேச்சு பாஜக - காங்கிரஸ் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு பேசியது, குஜராத் மக்களை அவமதிக்கும் செயலாகும்; அவர்கள் (குஜராத் மக்கள்) அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் தலைவரின் பேச்சால், அக்கட்சியின் தேர்தல் முடிவில் பாதிப்பை ஏற்படுத்தும்; பாஜகவுக்கு நன்மை கிடைக்கும். காங்கிரஸ் கட்சி ஒவ்ெவாரு முறையும், இவ்வாறு தனக்கு தானே புதைக்குழியை உருவாக்கி மூழ்கி வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தல் சவாலாக இருந்தது; ஆனால் இந்த தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது’ என்றார்.

Tags : Modi ,Congress ,Gujarat Maji ,President , Modi 100-headed Ravana issue; Election result will hurt Congress: Interview with former Gujarat Chief Minister
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...