போலி ஆதாரில் பயணித்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மீது வழக்கு: முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் முறையீடு

கான்பூர்: போலி ஆதார் அடையாள அட்டையை காட்டி ெடல்லியில் இருந்து மும்பை சென்ற சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கி பயணம் செய்தார். அவர், போலி ஆதார் அடையாள அட்டையை சமர்பித்து  பயணம் செய்ததாக கூறி, கோவல்தாலி போலீசார் அவர் மீது வழக்கு பதிவு  செய்துள்ளன். அவர் சமர்பித்த ஆதார் அட்டையில் அஷ்ரப் அலி என்பவரின் பெயரும், இர்ஃபான் சோலங்கியின் புகைப்படமும் இருந்தது.

அதனால் அவர் மீது  ஐபிசி 212, 419, 420, 467, 468, 471 மற்றும் 120பி பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும், தற்போது அவரை கைது செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிபி ஜோக்தாண்ட் கூறினார். இதற்கிடையே இர்ஃபான் சோலங்கியின் வழக்கறிஞர், கான்பூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு  தாக்கல் செய்துள்ளார்; இம்மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வருகிறது.

Related Stories: