×

சிறை அலுவலர் பணிக்கு 24 தேர்வு மையங்களில் டிச.26ல் கணினி வழித்தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறை அலுவலர் (ஆண்கள்/ பெண்கள்) பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித்தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிச.26ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நடைபெறும் எனவும் கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 14.09.2022-ம் நாளிட்ட அறிவிக்கை எண். 25/2022-இல், 22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Tags : DNBSC , Jail Officer Post Computerized Exam on Dec 26 in 24 Exam Centers: TNPSC Notification
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு