இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதுக்கோட்டை : இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுதலை செய்ய கோரி ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்தில் இருந்து 92 விசை படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் 5 விசை படகுகளையும் அதில் இருந்த 24 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள்.  24 மீனவர்களையும், 5 விசை படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கிழக்கு கற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் மீனவர்கள் ஈடுப்பட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக படகுகள் அனைத்தும் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: