×

திருவண்ணாமலை தீபத்திருவிழா 4ம் நாள் உற்சவம்: தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவின் 4ம் நாளான இன்று நாக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பலித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3ம் நாளான நேற்றிரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், சிம்ம வாகனத்தில் அண்ணாமலையார் பிரியாவிடையும், வெள்ளி அன்ன வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக 4ம் நாளான இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் இருந்து விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் 3ம் பிரகாரத்தை வலம் வந்து ராஜகோபுரம் எதிரில் அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க காலை உற்சவம் தொடங்கியது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், நாக வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தூப, தீபாராதனைகளுடன், நாதஸ்வரம், சிவவாத்தியங்கள் முழங்க நடந்த வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம், சிவபுரணாம் படியபடி வீதியுலாவில் பங்கேற்றனர். இன்று மாலை 6 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கலையரங்கில் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து ஆன்மிக ெசாற்பொழிவும் நடைபெற உள்ளது. இரவு உற்சவத்தில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையார் பிரியாவிடை, வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற உள்ளது.

Tags : Thiruvannamalai Dipadhitivrivra Festival ,Chandrasekar Bhavani , Tiruvannamalai Deepatri Festival 4th Day Utsavam: Chandrasekhar Bhavani in Golden Naga Vehicle
× RELATED தி.மலை தீபத்திருவிழா 3ம் நாள் உற்சவம்;...