×

தமிழகத்தில் உள்ள நிறுவனத்தில் தமிழருக்கு வேலை இல்லை என்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: திருமாவளவன் எம்.பி கண்டனம்

சென்னை: தமிழத்தில் உள்ள நிறுவனத்தில் தமிழருக்கு வேலை இல்லை என்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஜிஇடி என்னும் பட்டதாரி பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழகத்தை சேர்ந்தவர் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்பு கிட்டாத வகையில் அறிவிப்பு செய்ததை ரத்து செய்ய கோரி சிஎம்டிக்கு கடந்த 11ம் தேதி கடிதம் எழுதினேன். மனித வளத்துக்கான பொறுப்பு இயக்குநரிடம் தொலைபேசியில் வலியுறுத்தினோம். ஆனால் தேர்வை நடத்தி முடித்தனர். எதிர்பார்த்ததை போல தேர்வானவர்களில் ஒருவரும் தமிழர் இல்லை. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள நிறுவனத்தில் தமிழர் ஒருவருக்கும் வேலை வாய்ப்பில்லை என்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும். எனவே இத்தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறைப்படி அறிவித்து தேர்வை நடத்தி தமிழர்களை பணியில் அமர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Thirumavalavan ,Tamils ,Tamil Nadu , Thirumavalavan MP Condemns that Tamils do not have jobs in companies in Tamil Nadu is a betrayal of the people
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...