திருவொற்றியூரில் மாநகராட்சி நீச்சல் குளம்: கே.பி.சங்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இது, கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, நீச்சல் குளத்தை ஆய்வு செய்தார். பின்னர், நீச்சல் குளத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, குளியலறை மற்றும் கழிவறை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக நீச்சல் குளத்தை திறக்கும் நிகழ்ச்சி நேற்று  நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கே.பி.சங்கர் எம்எல்ஏ, நீச்சல் குளத்தை திறந்து வைத்தார். இதில், கவுன்சிலர்கள் ஜெயராமன், சரண்யா கலைவாணன், சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் சைலஸ், திமுக நிர்வாகிகள் நித்யாதாசன், குமரேசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: