ராஜா டீலக்சில் பிரபாசுக்கு 3 ஹீரோயின் ஜோடி

ஐதராபாத்: ராஜா டீலக்ஸ் தெலுங்கு படத்தில் பிரபாசுக்கு 3 ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க உள்ளனர். நாக் அஸ்வின் இயக்கும் புரொஜெக்ட் கே என பெயரிடாத படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து கொண்டிருக்கிறார். இதில் அமிதாப் பச்சன் முக்கிய வேடமேற்றுள்ளார். இதில் நடித்தபடியே ஆதி புருஷ் படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். கேஜிஎஃப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படம் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் மற்றொரு படத்துக்கு பிரபாஸ் கால்ஷீட் கொடுத்துள்ளார். மாருதி இயக்கும் இந்த படத்துக்கு ராஜா டீலக்ஸ் என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதைப்படி 3 ஹீரோயின்கள் நடிக்க வேண்டும். அந்த வேடங்களில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் நடிக்க உள்ளனர். ‘லவ்வர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் ரித்தி குமார். ‘பிரணயகா மீனுக்குளடே கடை’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். மராட்டிய பெண்ணான இவர் சில மராட்டிய படங்களிலும் நடித்துள்ளார். பிரபாஸ் நடித்த ‘ராதே ஷியாம்’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். தற்போது ‘சலாம் வெங்கி’ என்ற இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Related Stories: