திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை: திருவண்ணாமலையில் நடக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு 6 மாவட்டங்களிலிருந்து அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, கடந்த 27ம் தேதி கொடியேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக, போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வரும் 5ம் தேதி மற்றும் 6ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app ஆகிய இணைதளங்களின் மூலமாக முன்பதிவு செய்து

செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவல்களை பயணிகள் தெரிந்துக்கொள்ள: மதுரை -  9445014426, திருநெல்வேலி - 9445014428, நாகர்கோவில் - 9445014432,  தூத்துக்குடி - 9445014430, கோயம்புத்தூர் - 9445014435, போக்குவரத்து தலைமையகம் - 9445014435, 9445014424 மற்றும் 9445014416, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள  இதன் மூலம் கேட்டுக் கொள்ளபடுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.              

Related Stories: